உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் இப்பொழுது கூட இவர் தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார்.
ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினி உடன் இணைந்து கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் படங்களில் நடிப்பதையும் தாண்டி மற்ற நடிகர்கள் படங்களை பார்த்து சிறப்பாக இருந்தால் அவர்களை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏன் அண்மையில் கூட கமலின் விக்ரம் திரைப்படம் மாதவனின் ராக்கெட்ரி போன்ற படங்களை பார்த்து புகழ்ந்து பேசினார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்து உள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார் ஒரு போலீஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை சூரியா அந்த படத்தில் தத்துவமாக காட்டி இருப்பார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி இதுவரை எத்தனையோ பேர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ஆனால் அந்த உடல் மொழி பேசுவது என அனைத்தும் பர்ஃபெக்டாக நடிகர் சூர்யாவும் மட்டுமே பொருந்தி உள்ளது என பேசினார். மேலும் யாருக்கும் தெரியாமல் பெங்களூருவில் காக்க காக்க திரைப்படத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனாராம் ரஜினி.