கடந்த 2007 ஆண்டின் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் போக்கிரி இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்து இருந்தார், அதுமட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ், நாசர், வடிவேலு, நெப்போலியன் என பல நட்சத்திரங்கள் நடித்து வந்தார்கள் பிரபுதேவா இயக்கிய இந்த திரைப்படத்திற்கு மணிசர்மா இசை அமைத்திருந்தார்.
விஜய் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது, இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் போக்கிரி படத்தில் பல வசனங்கள் மிகவும் பிரபலமானது அதில் ஒன்று ஒரு தடவை நான் முடிவு பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.
இந்த டயலாக்கை நடிகை ஷ்ரத்தா கபூர் மேடையில் பேசி அசத்தியுள்ளார், பிரபாஸ் நடித்துவரும் சஹோ பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷ்ரத்தா கபூர் இந்த திரைப்படத்தின் promotion நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இதற்காக சென்னை வந்த சாரதா கபூர் அப்பொழுது விஜய்யின் போக்கிரி படத்தின் வசனத்தை பேசினார் இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.