வாரிசு படத்தினை தொடர்ந்து அஜித்தின் துணிவு திரைப்படத்தினை கழுவி ஊற்றிய புளு சட்டை மாறன்.! கடுப்பில் ரசிகர்கள்..

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர்தான் ப்ளூ சட்டை மாறன் இவர் நல்ல திரைப்படமாக இருந்தால் கூட அதில் குறை கண்டுபிடித்தது விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தை வச்சு செய்த நிலையில் இதனை அடுத்து துணிவு திரைப்படத்தின் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார.

தமிழ் சினிமாவில் எந்த திரைப்படங்கள் வெளிவந்தாலும் அதனை கேலி கிண்டல் செய்து விமர்சனம் செய்து வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன் இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய பாடமாக இருந்தாலும் அதனை பார்த்துவிட்டு கிண்டல் செய்து வருகிறார் இதன் காரணமாக இவருடைய விமர்சனங்களை பார்க்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் செம கடுப்பிலிருந்து வருகிறார்கள்.

இருந்தாலும் இவருடைய வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இதுவரையிலும் ஒன்பது லட்சத்திற்கும் மேலானவர்கள் இவருடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது துணிவு திரைப்படத்தைப் பற்றி மிகவும் அவதூறாக பேசி உள்ள நிலையில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரைய அனைவரும் இவரை திட்டி வருகிறார்.

நேற்று துணிவு திரைப்படத்தினை பார்த்த புளு சட்டை மாறன் துணிவு படம் வங்கியில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது துணிவு. இந்த படத்தில் இந்தியாவில் வளர்ந்து வரும் யுவர் பேங்க் என்ற வங்கியை கொள்ளையர்கள் தங்கள் வசப்படுத்துகின்றனர் வங்கியையும் அங்குள்ள மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை சமுத்திரக்கனி ஏற்கிறார்.

அவர்களுக்கு சவால் விடும் வகையில் அஜித் செயல்படுகிறார் வங்கியில் நடக்கும் மோசடிகளை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் வகையில் மாசான வில்லனாக அஜித் நடித்திருக்கிறார். சர்வதேச அளவில் ஏஜெண்டாக செயல்படும் ஒரு கும்பல் ஏன் இந்தியாவில் உள்ள ஒரு வங்கியை மட்டும் குறி வைத்து கொள்ளையடிக்கின்றனர் என்பதும் அவர்கள் எதற்காக கொள்ளையடிக்கின்றனர் அவர்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் என்ன என்பதை இந்த படத்தின் மீதி கதை.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தினை விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் படத்தில் ஒரு சீனை கேட்டு தான் அஜித் இந்த படத்தில் ஓகே சொன்னார் என்று வினோத் கோரி இருந்தார் ஆனால் இந்த படத்தில் அந்த காட்சியும் இடம்பெறவில்லை. நல்ல ஒரு கதையை உருவாக்கி அதை படமாக எடுப்பார்கள் ஆனால் இங்கு ஒரு படத்தை எடுத்து விட்டு அதனை ஒரு நல்ல கதையாக மாற்றுகின்றனர் கொள்ளையடிக்க சென்று விட்டு கிராம சபை கூட்டத்தைப் போல மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருக்கின்றார் ஹீரோ.

ஆனால் நம்ம குறையை கேட்கத்தான் ஆள் இல்லை தமிழ் சினிமா வழக்கப்படி ஆயிரம் பேர் ஹீரோவை நோக்கி பல குண்டுகள் செல்லும் ஆனால் எதுவுமே அவர் மீது பட மாட்டேங்குது அப்படியே பட்டாலும் குண்டுக்கு தான் ஏதாவது ஆகிறது தவிர இவருக்கு ஒன்றுமாக மாட்டேங்குதுன்னு பொங்கல் அன்று தீபாவளி பார்த்த மாதிரி கேக்குது என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment