கேப்டன் பேச்சை மதிக்காத வீரர்கள்.. கோலி உட்பட அனைவரையும் மீட்டிங்கில் வெளுத்து வாங்கிய ரோகித் ஷர்மா.!

0
rohit-
rohit-

இந்திய அணி வங்கதேசம் சென்று அங்கு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது அதன்படி முதல் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து இந்திய வீரர்களான  ரோகித் சர்மா, தவான் ஆகியவர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்பொருள்களில் வெளியேற அதன் பிறகு அந்த விராட் கோலி 9 ரன்கள், ஐயர் 24 வீரர்கள் என கம்மியான ஸ்கூர்களில் வெளியேற பிறகு வந்த விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் 70 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பிறகு வந்தவர்கள் அனைவரும் சொற்பரன்களில் வெளியேறினார் இதனால் இந்திய அணி 41.2 ஓவர்களில் 186 அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இதனை அடுத்து ஆடிய வங்கதேச மிகத் குறைந்த இலக்கை துரத்தியது ஆரம்பத்தில் விக்கெடுத்தாலும் பிறகு பொறுமையாக விளையாண்டு கடைசியாக வெற்றியை ருசித்தது.

போட்டி முடிந்த பிறகு இந்திய அணி எதனால் தோல்வி அடைந்தோம் என்பது குறித்து வீரர்கள், பயிற்சியாளர், கேப்டன் என அனைவரும் ஒரு அறையில்  விவாதம் நடத்தினர். அப்பொழுது பேசிய ரோஹித் சர்மா இந்த பீச்சில் பந்துகள் குத்திய வேகத்தில் பேட்டிற்கு சரியான வேகத்தில் வராது என முன்பு அனைவரிடமும் கூறி இருந்தேன். ராகுலைத் தவிர எந்த பேட்டரும் இதனை பொருள்படுத்தவே இல்லை என்பது நீங்கள் விளையாடிய விதத்திலேயே  தெரிந்தது.

நாம் சிறந்த பேட்டர்களாக இருக்கலாம் ஆனால் பிட்சை மதிக்காமல் பிட்ச் கண்டிஷன் தெரியாமல் விளையாடினால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் இந்த தவறை இனிவரும் போட்டிகளில் செய்யக்கூடாது இதை மனதில் வைத்து நாளையில் இருந்து பயிற்சி துவங்குங்கள் சரியாக விளையாடுபவர்களுக்கு தான் அணியில் ரெகுலராக இடம் கிடைக்கும் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என ரோகித் சர்மா பேசி உள்ளார்.