பரத் நடித்த “காதல்” திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நிராகரிந்த தனுஷ்.? எதனால் தெரியுமா.?

சினிமா உலகில் ஒரு சில படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்காமல் போகிவிடும்.  அதேசமயம் ஒருசில படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கவர்ந்து விட்டால் போதும் காலம் கடந்த பிறகும் அந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவது வழக்கம்.

அப்படி ஒரு அதைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான திரைப்படம் “காதல்”. இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின்னாக பரத் – சந்தியா நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் வெளிவந்தபோது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் கடந்த நிலையில் இப்போது கூட மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன படமாக இருக்கிறது.

அந்த அளவிற்கு படத்தில் காதல், செண்டிமென்ட், காமெடி என அனைத்தும் அட்டகாசமாக பொருந்தியிருந்தத திரைப்படம் தான் காதல்.இயக்குனர் பாலாஜி சக்திவேல் முதலில் இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை மனதில் வைத்து தான் எழுதி உள்ளார் ஆனால் அந்த ஹீரோ சந்தியாவுக்கு பொருத்தமாக இருப்பாரா என்ற எண்ணமும் அவருக்கு தோன்றியது.

அந்த நடிகர் வேறு யாருமல்ல பாய்ஸ் படத்தில் நடித்தார் மணிகண்டனை தான் மனதில் வைத்து கதை எழுதி ஒரு சில காட்சிகள் சந்தியா மற்றும் மணிகண்டனை நடிக்க வைத்து உள்ளனர். ஆனால் இவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை. இதை உணர்ந்து கொண்ட இயக்குனர் பாலாஜி சக்திவேல் மணிகண்டனுக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி உள்ளார்.

kadhal-

அப்போது தான் பாய்ஸ் படத்தில் நடித்த நடிகர் பரத்தை ஹீரோவாக மாற்றி உள்ளார். இவரும், சந்தியாவும் சந்திக்கும் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக இருந்த காரணத்தினால் நடிகர் மணிகண்டனை படத்திலிருந்து தூக்கிவிட்டார். பாலாஜி சக்திவேல் படத்தின் கதையை மணிகண்டன், பரத்திற்கு முன்பாகவே நடிகர் தனுஷ் உடன் இந்த கதையை சொல்லி உள்ளார்.

அந்த சமயத்தில் வேறு ஒரு படத்திற்காக வெளிநாட்டில் இருந்து உள்ளார் தனுஷ் இருப்பினும் அந்த படத்தின் கதையை கேட்டு இருந்தார் படத்தின் கதை தனுசுக்கு ரொம்ப பிடித்து போய் இருந்தாலும் கடைசி காட்சியில் முருகன் பைத்தியம் பிடித்து சுற்றித் திரிவது போல் எடுக்கப்பட்டிருக்கும். அந்த காரணத்தினால் தனுஷ் இந்த படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version