பார்ப்பவர்களை திகிலில் மூழ்கடிக்கும் வகையில் வெளியானது பீட்சா-3 டீசர்.! ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டுகிறார்களே

0

தமிழில் பல குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் முதல் முதலாக உருவாகிய திரைப்படம்தான் பீட்சா. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன், ஓவியர், வீர சந்தானம் சிம்கா ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை அட்ட கத்தி திரைப்படத்தை தயாரித்த சிவி குமார் தயாரித்திருந்தார்,  அதுமட்டுமில்லாமல் தமிழில் முதன்முறையாக 7.1 சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தியது இந்தத் திரைப்படத்திற்காக தான்.

இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தான் சிறந்த இயக்குனர் என நிரூபித்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பீட்சா 2 என்ற திரைப்படமும் உருவானது ஆனால் பீட்சா-2  எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இருந்தாலும் பீசா 2 திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவி குமார் பீசா 2 வசூல் ரீதியாக லாபம் கொடுத்ததை கூறினார், இந்த நிலையில் தற்போது பீட்சா தி மம்மி என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் சிவி குமார்.

பீச்சா முதல் பாகத்தில் விஜய் சேதுபதியும் இரண்டாம் பாகத்தில் அசோக் செல்வன் நடித்திருந்தார்கள்,  அப்படி இருக்கும் வகையில் மூன்றாவது பாகத்தில் அஸ்வின் குமார் என்ற நடிகர் நடித்துள்ளார் இவர் தல அஜித் நடிப்பில் வெளியாகி வேதாளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.

இந்த நிலையில் தற்பொழுது பீட்சா 3 திரைப்படத்தின் டீசர் வெளியாகி பார்ப்பவர்களை திகிலில் மிரட்டியுள்ளது.

இதோ அந்த டீசர்.