விக்ரம், சூர்யா நடித்த பிதாமகன் திரைப்படத்தில் விஜய்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம்வந்த கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய், சூர்யா, விக்ரம் இந்த மூன்று முன்னணி நடிகர்களும் நடிப்பில் எந்த திரைப் படங்கள் வெளிவந்தாலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் தற்போது இவர்கள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூவருமே தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இவர் தனது 39வது படத்திலும் மற்றும் பாக்யராஜ் இயக்கத்தில் தனது 40வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து விக்ரம் கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம், சூர்யா,  விஜய் இவர்களுடன் நடிகை லைலா மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர்கள் பிதாமகன் திரைப்படத்தின் பொழுது இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment