பொங்கல் ரேசில் வலிமை படத்துடன் மோத ரெடியான ஹிப்ஹூப் ஆதியின் படம்.? வெளிவந்த புதிய படத்தின் போஸ்டர்.!

0
aadhi
aadhi

சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க அடுத்தடுத்து தனது திறமையை வெளிக்காட்டினார் மட்டுமே அது சாத்தியமாகும் அதை சமீபகாலமாக உணர்ந்து கொண்ட இளம் பிரபலங்கள் பலரும் தனது திறமையை காட்டுகின்றனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல்வேறு டாப் நடிகர் படங்களுக்கு இசையமைத்து வந்த ஹிப்ஹாப் ஆதி திடீரென தனது ரூட்டை மாற்றி இயக்குனராகவும்,  ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார் மீசைய முறுக்கு படத்தில் இவர் ஹீரோவாக நடித்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டினார் அதன்பின் தமிழ் சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில் நட்பே துணை, நான் சிரித்தால் ஆகியவை நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அண்மையில் ஆதி நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் சிவகுமாரின் சபதம். இந்த திரைப் படத்தை முடித்த கையோடு அடுத்த திரைப் படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அஸ்வின் ராம்குமார் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துவரும் திரைப்படம் அன்பறிவு. இந்த படத்தில் மேலும் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் நெப்போலியன், விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் OTT தளத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்தப்படமும் பொங்கலை குறிவைத்து வெளியாகும் என கருதப்படுகிறது ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்துடன் பல்வேறு திரைப்படங்கள் மோதுகின்றன தனுஷின் மாறன், விக்ரமின் மகான் இருக்கின்ற நிலையில் இந்தப் படமும் மோதும் என கணிக்கப்பட்டுள்ளது.

aadhi
aadhi