வசூல் வேட்டையாடும் பிச்சைக்காரன் 2 படம்.. இரண்டு நாளில் மட்டுமே இத்தனை கோடியா.?

pichaikkaran
pichaikkaran

ஹாலிவுட் சினிமாவில் தான் பார்ட் 1, பார்ட் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகின அதே ஃபார்முலாவை தற்பொழுது தமிழ் சினிமாவும் தொடர்ந்து கையாண்டு வருகிறது ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் அடுத்தடுத்த படம் வெளியாகிறது அந்த வகையில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் பிச்சைக்காரன்.

இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார் இந்த படம் மே 19ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது முதல் பாகம் அம்மா சென்டிமென்ட் என்றால் இரண்டாவது பாகம் சென்டிமென்ட் தான் அதேசமயம் சற்று வித்தியாசமாக இந்த படத்தை எடுத்திருந்தனர்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக இருந்தது. படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ராதாரவி, மன்சூர் அலிகான், kavya thapar, dev gill, ஜான் விஜய், ஒய் ஜி மகேந்திரன், hareesh peradi மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர். படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று..

தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் அடுத்தடுத்து இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் இரண்டு நாள் முடிவில் உலக அளவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவலும் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்வையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் இதுவரை உலக அளவில் சுமார் 15 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது எனது தகவல் வெளிவந்துள்ளது. இது பிச்சைக்காரன் படத்திற்கு பெரிய ஓபனிங்காக அமைந்துள்ளது இதனால் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது அதிகரிக்கும் என  கருதப்படுகிறது.