ஆண்ட்ரியா நடிக்கும் அரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.! இவர் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாத்தீங்களா.!

தமிழ் திரையுலகில் திகிலான திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் சுந்தர் சி இவரது இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்றால் அது அரண்மனை இந்த திரைப்படம் வெளியானபோது கிராம மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும் இயக்குனர் சுந்தர் சி எந்த திரைப்படத்தை எடுத்தாலும் தனது திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து இயக்கி வருவார்.

அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி தற்பொழுது அரண்மனை திரைப் படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்து கிடக்கிறார்கள் மேலும் இதில் ஆர்யா,ஆண்ட்ரியா,ராசிகன்னா மறைந்த நடிகர் விவேக்,யோகிபாபு போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள்,நடிகைகளாக நடிப்பதால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

குறிப்பாக இதில் ஆண்ட்ரியா எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் பலரும் பல மாதங்களாகவே பல கேள்விகளை எழுப்பினார்கள் இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது ஆம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் ஆண்ட்ரியா இந்த திரைப்படத்திலும் பேய் மாதிரி தான் நடித்து இருப்பார் என்பது மட்டும் தெரிகிறது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment