சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சின்னஞ்சிறு வயதில் அஜித் மனைவி ஷாலினி எடுத்த புகைப்படங்கள்.! அதுவும் எந்த படப்பிடிப்பில் தெரியுமா.?

0

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் முன்னணி நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் ஆவலாக இருப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் இவர் தனது திரைப்படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் நடித்திருப்பார் மேலும் இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளாக நடித்துள்ளார்கள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அண்மையில் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று திரும்பிய புகைப்படம் கூட வெளியானது.

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுதே பல திரைப்படங்களில் நடித்த நடிகை தான் ஷாலினி இவர் தனது சிறு வயதிலிருந்தே சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவரது திருமண வாழ்க்கையில் கடந்த 2000 ஆண்டு தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் இருப்பதை நாம் அறிவோம்.

shalini
shalini

ஷாலினி அஜித்துடன் இணைந்து படப்பிடிப்பில் நடித்து வரும் பொழுது காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் ராஜா சின்ன ரோஜா இந்த திரைப்படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

rajini3
rajini3

ஆம் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் ரஜினியுடன் ஷாலினி சின்ன வயதில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ஷாலினியா என ஆச்சரியப்பட்டு  இந்த புகைப்படத்தை பார்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.