இது ரீல் இல்ல ரியல்.. உதயநிதிக்கு மட்டும் சோபா வடிவேலுக்கும் மாரிசெல்வராஜ்க்கும் பிளாஸ்டிக் சேர்.! வைரலாகும் புகைப்படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் அவர் இந்த படத்தில் வைத்திருந்த காட்சி அவருக்கே ரியலாக மாறி இருக்கிறது என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் வசூல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடாமல் இருந்து வருகிறது.

ஆனால் தற்பொழுது வரையிலும் 40 கோடி வரை மாமன்னன் திரைப்படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்த படம் வெளியாகி ஒரு வாரமாகி இருக்கும் நிலையில் தற்போது வரையிலும் இது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த படம் சமுதாயத்தில் அனைவரும் சமம் தான் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்ததால் இதனை ரசிகர்கள் பாராட்டினார்கள்.

மேலும் அதிமுகவை சேர்ந்த தனபாலின் கதை என்றும் எடப்பாடி தான் வில்லன் பகத் பாஸில் ரோல் என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தது. மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்துக் கொண்ட நிலையில் தேவர் மகன் படம் தனக்கு தந்த வலிகளின் வழிபாடு தான் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என மாரி செல்வராஜ் வெளிப்படையாக பேசியிருந்தார்.

maamannan
maamannan

ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கமலஹாசனை சந்தித்து மன்னிப்பு கேட்டு இருந்தார் இதனால் இந்த சர்ச்சை முடிந்தது. மாமன்னன் படத்தில் பட்டியலின வேட்பாளருக்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்து பகத் பாஸில் உட்கார வைக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது அதேபோல் திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் வழங்கப்பட்ட போட்டோக்களும் இணையதளத்தில் வெளியானது.

maamannan
maamannan

இப்படிப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் சோபாவில் உட்கார்ந்து இருக்க வடிவேலும் மற்றும் மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இருவரும் பிளாஸ்டிக் சேரியில் அமர்ந்திருக்கிறார்கள். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை ட்ரோல் செய்து வருகின்றனர். இதுகுறித்து உதயநிதியின் ரசிகர்கள் இது உதயநிதி வீடு இல்லை வடிவேலு வீடு எனவே வடிவேலு உதயநிதியை ஷோபாவில் அமர வைத்து அழகு பார்த்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

Leave a Comment