சினிமா ஆரம்பத்தில் அதிக தோல்வி படங்களை கொடுத்தவர் என்ற பெயரை பெற்றவர் நடிகர் அஜித்குமார் இருப்பினும் அதை மாற்றி அமைக்கும் வகையில் தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு அதில் நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
அதனை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கின் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பூனேவில் தொடங்கப்பட இருக்கிறது நடிகர் அஜித்குமார் தற்பொழுது மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளார் வெகு விரைவிலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.
ஏகே 61 திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் வயதான தோற்றத்திலும் மற்றும் இளமையான தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டது முதல் கட்ட ஷூட்டிங்கில் அஜித் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் இரண்டாவது கட்ட சூட்டிங்கில் அஜித் இளமையான கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் சினிமா ஆரம்பத்தில் வாங்கிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படம் நிச்சயம் தீனா படத்தின் பொழுது எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பரப்பி வருகின்றனர். இதோ நடிகர் அஜித் பழைய காருடன் இருக்கும் அந்த புகைப்படம்.
