காதலர் தினத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.! இது வேற லெவல் தான் எனக்கூறும் ரசிகர்கள்

தொலைக் காட்சிகளுக்கு இடையே டி ஆர் பி யில் பலத்த போட்டி நிலவி வருகிறது அதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் எப்படியாவது டிஆர்பி-யில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என புதுப்புது நிகழ்ச்சிகள் புதுப்புது சீரியல்கள் என ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ அதிகமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார் ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகிவிட்டார். இவர் சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் என்னவென்று கேட்டால் பட வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் நடிக்க மாட்டேன் என கூறியதாக தகவல் வெளியானது.

ஆனால் இவர் எந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்று இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை இந்த நிலையில் மீண்டும் ரோஷினி ஹரிப்ரியன் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். விரைவில் திரைப்படங்களிலும் நடிப்பார் என கூறப்படுகிறது.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்கள் அந்த வகையில் ரோஷ்நி ஹரிப்ரியன் அவர்களும் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் ரோஷினி ஹரிப்ரியன்  புடவையில் குடும்ப குத்து விளக்கு போல் தோற்றமளிக்கிறார் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/roshnihari_/status/1493243409389469706?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1493243409389469706%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Froshini-haripriyan-latest-photoshoot-1644943985

Leave a Comment