15வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய தொகுப்பாளர் மாகாபா.! இணையதளத்தில் கொடி கட்டி பறக்கும் புகைப்படம்

0

விஜய் டிவி TRP – யில்  முன்னேற எப்பொழுதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது அதற்கு முழுமையான காரணம் அவர்களிடத்தில் நிறைய திறமை உள்ள தொகுப்பாளர்கள் இருப்பவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சியை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றுகின்றனர்.

அதிக பெண் தொகுப்பினை உருவாக்கி வைத்துள்ளது விஜய் டிவி அப்படி இருக்க ஒரு பக்கம் மாகாபா என்ற ஒருவர் மட்டும் அவர்களுக்கு இணையான தொகுப்பாளராக வலம் வருகிறார். இவர் பல நிகழ்ச்சிகள் ஏற்று தொகுத்து வெற்றி பெற்று இன்றும் சிறப்பாக சீசன் சித்தனாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சூப்பர் சிங்கர், முரட்டு சிங்கிள்  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மேலும் விஜய் டிவி அவார்ட்ஸ் போன்றவற்றை திறம்பட கையாண்டு அதற்காக விருதையும் பெற்றவர். தற்பொழுது அர்ச்சனாவுடன்  இணைந்து மற்றொரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இப்படி விஜய் டிவியில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் மேலும் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் மாகாபா ஆனந்த்.

இந்த நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது 15வது திருமண நாளை மிகச் சிறப்பாக கொண்டாடி இறுதியில் கேக் வெட்டி கோலாகல படுத்தினார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் டிரெண்டிங்கில் வலம் வருகின்றனர் நீங்களே பாருங்கள்.