கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்.! தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால் இவர் சினிமா உலகிற்கு முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பார்வையில் தென்பட்டார்.

அதன்பிறகு தமிழில் பரத் நடிப்பில் வெளியாகிய பழனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு தெலுங்கில்தான் படவாய்ப்புகள் அமைந்தது தமிழில் இவர் நடிப்பில் வெளியாகிய சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு ஆகிய திரைப்படங்கள் ஓரளவுதான் ரசிகர்களிடம் விமர்சனம் கிடைத்தது. தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தின் மூலம்  பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் அழகுராஜா, மாரி ஜில்லா, கவலை வேண்டாம், விவேகம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த காஜல் அகர்வால் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சிலுவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் காஜல்அகர்வால் அதற்கு காரணம் என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது இந்த நிலையில் காஜல்அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது மேலும் சில நாட்களுக்கு முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை எமோச்சியுடன் அவரது கணவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வால் வீடியோ கால் செய்து பேசிக்கொண்டிருக்கிறார் இதோ அந்த புகைப்படம்.

kajalkajal
kajal

Leave a Comment