வாகன ஓட்டிகளின் வயிற்றில் அடிக்கும் படி எகிறியது பெட்ரோல் டீசல் விலை..! பூட்டுங்கட நம்ம கட்டவண்டிய..!

petrol
petrol

petrol and diesel rate increased: வாகன ஓட்டிகளின் வயிற்றில் அடித்தது போல் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் டீசலின் விலை பொதுமக்களை மிக அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.

நாடு முழுவதுமாக சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள்.

அதன் பிறகு ஜூன் மாதம் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்ய ஆரம்பித்தார்கள்.  இந்நிலையில் தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 85.12 ரூபாய். அதேபோல டீசல் விலை 77.56 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஆனால் இந்த விலை நேற்று மட்டும் தான் இன்று காலை முதல் பெட்ரோலின் விலை 19 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது அதேபோன்று டீசலின் விலை 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வைரஸ் தாக்கத்திற்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென பெட்ரோல் டீசல் விலை உயர்த்தியது மக்களை பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.