அச்சு அசல் கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே இருக்கும் பெப்சி உமாவை பார்த்தீர்களா.! வைரல் வீடியோ..

பொதுவாக நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் தொகுப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. அப்படி தொகுப்பாளராக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் பெப்சி உமா. தொகுப்பாளர்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ஆளுமை, நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் என பல திறமைகளை கொண்டவர்.

பெப்சி உமா சன் டிவியில் ஒளிபரப்பான “பெப்சி உங்கள் சாய்ஸ்” என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமானார். அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார் அதன்படி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பெப்சி உமா ஷொக்களில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

இவ்வாறு பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் இவருடைய அழகான குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். சிங்கிள் பிலிட் உடையில் பட்டுப் புடவை, ஹேர் ஸ்டைல், சிரித்த முகத்துடன் எப்பொழுதும் ரசிகர்களை கவரும் வகையில் இவருடைய முக பாவனைகள் இருக்கும்.

இவருடைய இயற்பெயர் உமா மகேஸ்வரி தான் ஆனால் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் மூலம் இவரை பெப்சி உமா என அழைக்க ஆரம்பித்தனர். எனவே நிகழ்ச்சி இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படி உலகின் நம்பர் ஒன் ஆங்கர் என மக்கள் இவரை கருதினார்கள்.

இவ்வாறு இதன் மூலம் டோலிவுட் மற்றும் பாலிவுட் துறைகளில் இருந்து பல பிரபல இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க முன் வந்தார்கள். ஆனால் பெப்சி உமா மகேஸ்வரி நடிப்பு உலகில் நுழைய விருப்பம் இல்லாத காரணத்தினால் வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

தற்பொழுது பெரிதாக வெளிவுலகில் தலை காட்டாமல் இருந்த ஒரு பெப்சி உமா சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அழகு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க அதை சொல்லாதீங்க கேட்கவே பயமாயிருக்கு அழியப் போற இந்த அழகுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு முக்கியத்துவம் தராங்கன்னு தெரியல. மனிதனா பிறந்த ஒவ்வொருவரும் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது  பொதுவான ஒன்றுதான் ஆனால் முக்கியமாக பெண்களின் அழகைப் பார்த்து எடை போடுவது மிகவும் தவறான ஒன்று நான் ஒத்துக்கவே மாட்டேன் பார்த்தால் சந்தோஷம் தருகிற எல்லாமே அழகுதான் என கூறியுள்ளார்.

Leave a Comment