தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும் பின் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்டு ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதன்பின் மக்களை கவரும் படியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கியதோடு இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றி ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் ஒரு கட்டத்தில் இவர் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தூக்கி எறிந்துவிட்டு வில்லனாகவும், குணச்சித்திரம், கெஸ்ட் ரோல் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.
ஒரு சமயத்தில் இயகுனருகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பிடித்துப்போன ஒரு நடிகராக விஸ்வரூபம் எடுத்தார். தமிழை தாண்டியும் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது அங்கேயும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி வெற்றி மேல் வெற்றியை கண்டுவந்த இவர் திடீரென சின்னத்திரை பக்கம் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது உள்ளார்.
மீடியா உலகில் கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி ஓடிக்கொண்டே இருப்பதால் மக்கள் மத்தியில் பேசும் நபராகவே நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார் அண்மையில் பிஎம்டபிள்யூ பைக், கார்கள் விற்கும் இடத்திற்கு சென்று உள்ளார்.
அப்போது அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் புதிய பிஎம்டபிள்யூ பைக் வாங்கியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

