ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக கூறி இளம் பெண்ணை மோசம் செய்த நபர்கள்.!

நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ஆசை காட்டி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கும் தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் ஆசைப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்ற திரைப்படம் தான் அண்ணாத்த.

இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின் படத்தில் நடிக்க வைக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ஆசை காட்டி 10 லட்ச ரூபாய் மோசடி செய்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் இதுபோன்று பலரும் பல பெண்களிடம் ஆசை காட்டி மோசடி செய்துள்ள கும்பலில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் மும்பையைச் சேர்ந்த நிலேஷா என்ற பெண்ணிடம் பியூஸ் ஜெயின், மதன் ருபேரல் என்ற இரண்டு பேர் பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறியுள்ளார்கள் அவர்கள் நாங்கள் ஹைதராபாத் சேர்ந்த வெங்கடேஷ்வரா கிரியேஷன் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் நாங்கள் தான் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர், ஆர்.சி 15 போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறோம் இந்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம் ரஜினியின் மகள் வருடத்தில் நீங்களே நடிங்கள் அது கிடைக்கவில்லை என்றால் சைபர் ஹேக்கர் இடத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறோம் என கூறியுள்ளார்கள்.

மேலும் இது குறித்து போலியான ஆவணங்களை அந்த பெண்ணிடம் அந்த நபர்கள் கொடுத்துள்ளனர் அந்த பெண்ணும் சொன்னதை நம்பி விட்டு ஜூலை மாதம் போன் மூலம் அந்த நபர்கள் அந்த பெண்ணிடம் தொடர்புக்கொண்டு பாஸ்போர்ட் சரிபார்ப்பு அரசு அனுமதி போன்ற சட்ட ரீதியான காரணங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள் உடனே அந்தப் பெண் 10 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்.

பணம் கொடுத்த சில நாட்கள் கழித்து அந்த நபர்களை அந்த பெண் தொடர்பு கொள்ள ஆனால் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை பிறகு அந்த பெண்ணுக்கு அவர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பது தெரிய வருகிறது எனவே அடுத்த நாளே மும்பை தகிசர் போலீஸ்சில் புகார் அளித்துள்ளார். எனவே அந்தப் பெண் புகார் அளித்த அடிப்படையில் போலீசார்களும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் அதன் பிறகு தான் இந்த இருவருமே ஏற்கனவே கம்பெனி பெயரை சொல்லி இரண்டு முறை மோசடி செய்திருப்பது தெரிய வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது அந்த நபர்களை தேடி வருகிறார்கள் போலீசார்கள்.

Leave a Comment