விவசாயிகளுக்காக விஜய் சேதுபதி அதிரடி.! பாராட்டும் மக்கள்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி இவர் வருடத்திற்கு ஆறு ஏழு திரைப்படங்களில் நடித்து வெளியிடுவார், இவர் நடிப்பில் சங்கத் தமிழன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய திரைப்படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சுருதிஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் லாபம்.

லாபம் திரைப்படம் விவசாயிகளின் பொருளாதார சூழ்நிலையை பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது, இந்த திரைப்படம் சென்னையை சுற்றி உள்ள குன்றத்தூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, இந்தத் திரைப்படத்திற்காக விவசாய சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டது, அதற்காக விஜய் சேதுபதி படத்திற்காக அமைக்காமல் உண்மையான விவசாய கட்டிடம் ஒன்றை கட்ட சொல்லி உள்ளார்.

அதேபோல் சூட்டிங் முடிந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கு கொடுக்க சொல்லிவிட்டார் இதனால் அந்த ஊர் விவசாய மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்,.

மேலும் எங்கள் லாபம் திரைப்படத்தை விஜய்சேதுபதி போராட்டம் மற்றும் 7cs நிறுவனம் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.