விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதிகண்ணம்மா இந்த சீரியலில் பல திருப்பங்கள் இருப்பதால் ரசிகர்கள் விரும்பும் வகையிலும் இருந்து வருகிறது. தொடர்ந்து விறுவிறுப்பாக நோக்கி செல்கிறது.
எட்டு வருடங்களாக தனது அப்பா யார் என்று தெரியாமல் இருந்து வரும் லக்ஷ்மிக்கு கண்ணம்மா தனது பிறந்தநாள் அன்று உன் அப்பா யார் என்பதை கூறுகிறேன் என்று கூறிவுள்ளார். எனவே தனது அப்பாவை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் லட்சுமி தனது அப்பாவை எப்படியெல்லாம் வரவேற்க வேண்டும் என்பதற்காக தன்னால் முடிந்த சில விஷயங்களை செய்து வருகிறார்.
ஆனால் பாரதி எப்படியாவது கண்ணம்மாவின் பிறந்தநாளில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தற்பொழுது ஹைதராபாத் செல்ல முடிவெடுத்துள்ளார். அதனை வெண்பா விடம் கூற வெண்பாவும் நீ இங்கிருந்தால் எப்படியாவது உன்னை கண்ணம்மாவின் வீட்டிற்கு அழைத்து போய்விடுவார்கள் ஹைதராபாத் போவதுதான் நல்லது என்று கூற உடனே பாரதி டிக்கட்டை எடுத்துக் காட்டுகிறார்.
இரண்டு டிக்கெட்டுகளை பார்த்ததும் வெண்பா தனக்கு ஒன்று என நினைக்க உடனே பாரதி ஹேமாவையும் தன்னுடன் அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரங்களாக இந்த எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் இருந்தாலும் இயக்குனர் தற்போது உண்மையை கொண்டு வரமாட்டார் இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும்.
இந்த சீரியல் இயக்குனரான பிரவீன் பென்னட் பாரதிகண்ணம்மா சீரியலை தொடர்ந்து ஹிட் சீரியல்களான ராஜா ராணி 2,நம்ம வீட்டு பொண்ணு சீரியல்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவியுடன் பிரவீன் துபாய் சென்றுள்ளார் அங்கு இருவரும் லவ்வர்ஸ் டேவை கொண்டாடி உள்ளார்கள் அப்பொழுது ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.