சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் நடிகை ரேஷ்மா. வெள்ளி திரையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமடைந்தார் அதன் பிறகு இவருக்கு ஏற்றப்பட்ட வாய்ப்புகள் வந்தன..
தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரென சின்னத்திரையில் வாய்ப்புகள் குவிந்தது அதையும் விட்டு விடாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற ரோலில் முதலில் ஜெனிபர் நடித்து வந்தார் அவர் சில காரணங்களால் சீரியலை விட்டு வெளியேற பின் ரேஷ்மா..
ராதிகா கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்தார். இவரும் இந்த ரோலில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்துள்ளார் இது போக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார் மறுபக்கம் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜாட்ச்சாகவும் பணியாற்றி வருகிறார்.
இப்படி திரை உலகில் ஜொலிக்கும் இவர் சோசியல் மீடியாவில் நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து இழுத்து வருகிறார் அதில் குறிப்பாக புடவையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக வைரலாகி வருகின்றன. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் ரேஷ்மா சமீபத்திய வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தி உள்ளார்.
அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. ரேஷ்மாவின் மகன் பேட்டி எடுத்த போது payment இல்லாமா இன்டர்வியூ கொடுக்க முடியாது payment குடுங்க இன்டர்வியூ தரேன் என்று சிரித்தபடி சொல்கிறார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.
