மாஸ்டர் படத்தின் வசூலை சுக்குநூறாக உடைத்த பவன் கல்யாணின் “வக்கீல் சாப்”.! எத்தனை கோடி அதிகம் தெரியுமா.!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு, பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த திரைப்படம் மாஸ்டர்.

கொரோனா தோற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் திரையரங்குகள் 50% இருக் கைகளுடன் அரசு அனுமதித்தது இருப்பினும் படம் வேற லெவல் இருந்ததால் வசூலை அள்ளியது மேலும் OTT தளத்திலும் நல்ல லாபம் பார்த்தது மாஸ்டர்.

பிறகு எந்த ஒரு திரைப்படமும் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையை கிட்ட கூட நெருங்க முடியாமல் திணறியது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமா நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப். திரைப்படம் ஒரு ரீமிக்ஸ் திரைப்படமாகும் இந்த திரைப்படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் பிங்க் என்ற பெயரில் நடித்திருந்தார்.

தமிழில் அஜித் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் நடித்தார். அதனை ரீமேக் செய்து தற்பொழுது வக்கீல் சாப் என பெயர் சூட்டப்பட்டு அதில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளிவந்து மக்களின் ஆதரவை பெற்றதோடு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது இத்திரைப்படம் 100% இருக்கைகளுடன் வெளியாகியது.

இந்தப் படம் முதல் நாளில் மட்டும் சுமார் 40 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது ஒருசில 50 கோடியைத் தாண்டி விட்டதாக கூறுகின்றனர் எது எப்படியோ மாஸ்டர் படம் 35 கோடி முதல் நாள் அள்ளியது ஆனால் அதை விட அதிகமாக வக்கீல் சாப் படம் வசூல் அள்ளி உள்ளது.

Leave a Comment

Exit mobile version