அட விஜய் டிவியில் உள்ள இத்தனை பேர் ரெக்காட் டான்ஸ் ஆடுபவர்களா.! பவித்ரா முதல் ராமர் வரை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தகவல்…

வெள்ளித்திரையில் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடித்து வரும் பலரும் சின்னத்திரையின் மூலம் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அதிலும் முக்கியமாக விஜய் தொலைக் காட்சிகளில் இருந்து அறிமுகமானவர்கள் ஏராளம் அந்தவகையில் விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் ட்ரெண்டிங்காக ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சி தான் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை பவித்ரா. இவர் முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.அதன் பிறகு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் தமிழில் வெளிவந்த  சார் லவ் ஸ்டோரி சீசன் 3 திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்த உல்லாசம் திரைப் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்து உள்ள இந்த  இரண்டு திரைப்படங்களிலும்  சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டார் பவித்ரா.

pavithra 7
pavithra 7

இந்நிகழ்ச்சியில் புகழ் மற்றும் பவித்ரா இவர்களின் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் மூலம் பிரபலமடைந்து உள்ள இவர் காமெடி நடிகர் சிவா ஹீரோவாக அறிமுகமாக உள்ள திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பவித்ரா தான் நடிக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் பவித்ரா ஊர் திருவிழாக்கள், ரெக்கா டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடி உள்ளார்.

pavithra ramar
pavithra ramar

அதுவும் முக்கியமாக கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ராமர் மற்றும் பழைய ஜோக் தங்கதுரை ஆகியவர்களுடன் நடனமாடி உள்ளார். இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி உள்ள பல நடிகர், நடிகைகளும் இவ்வாறு நடனமாடி உள்ளார்கள் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment