“ஒரு மழை கால நாளன்று” என்ற தலைப்புடன் பவித்ரா வெளியிட்ட வீடியோ.! சும்மா ஜிவ்வுன்னு இருக்கே என கூறும் ரசிகர்கள்

மலையாளத்தில் வெளிவந்த உல்லாசம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையாத காரணத்தினால் தமிழில் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.

இவருக்கு சொல்லுமளவிற்கு சில திரைப்படங்களுக்கு மேல் படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத காரணத்தினால் குறு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீடுவதை ஆரம்பித்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவருக்கு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். அதோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின், புகழ்,பாலா, பவித்ரா, தர்ஷா குப்தா என ஏராளமானோருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்தவகையில் பவித்ராவிற்கும் தொடர்ந்து  தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதில் ஒன்று  கமெடி நடிகர் சிவாவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் புடவையில் தேவதை போன்று இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்து விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.