STR-இன் பத்து தல, சிம்பு ரசிகர்கள் கெத்து தல.! சிம்பு திருமணம் குறித்து பேசிய கூல் சுரேஷ்…

நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் கோவில் கோவிலாக சென்று வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய கூல் சுரேஷ் சிம்புவின் திருமணம் குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் சிம்புவின் தீவிர ரசிகராகவும் திகழ்பவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் சிம்பு நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் சிம்புவை விட இவர்தான் அதிகமாக பிரமோஷன் செய்து வருகிறார் அந்த அளவிற்கு சிம்புவின் தீவிர பக்தராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்காக இவர் செய்த பிரமோஷன் இந்த படத்தை வெற்றி பெற வைத்தது அந்த அளவிற்கு வெந்து தணிந்தது காடு படுத்திருக்கும், மாநாடு படுத்திருக்கும் பயங்கரமாக பிரமோஷன் செய்தார்.

அதன் பிறகு இப்படி சிம்புவின் படத்திற்கு பிரமோஷன் செய்து வந்த கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் அனைத்து படத்திற்கும் பிரமோஷன் செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்திற்காக கோவில் கோவிலாக சென்று அபிஷேகம் செய்து வருகிறார் அது மட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் பத்து தல போஸ்டரை எடுத்துக்கொண்டு சுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அம்மன் கோவிலில் பேட்டியளித்த கூல் சுரேஷ் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார் அதாவது  தலைவர் சிம்புவிற்கு திருமணம் என்று நடந்தால் அது பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்புதான் நடக்கும் அதுமட்டுமல்லாமல் டி ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார் விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதுவரைக்கும் பல நடிகைகள் உடன் சிம்பு திருமணம் குறித்த சில வதந்திகள் வெளியானது இந்த நிலையில் கூல் சுரேஷ் இவ்வாறு சொன்னது நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பத்து தல திரைப்படம் குறித்து பேசிய கூல் சுரேஷ் எஸ்டிஆர் இன் பத்து தல சிம்பு ரசிகர்கள் கெத்து தல என்று கூல் சுரேஷ் வசனம் சொன்னவுடன் சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

Leave a Comment