மீண்டும் பத்து தல படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தாரா சிம்பு இதோ முழு விமர்சனம்.!

சிம்பு கௌதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் பத்து தல  இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏற்கனவே சிம்பு மீது பல சர்ச்சைகள் இருந்தது. அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என பலரும் கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார்கள் இவையெல்லாம் தவிடு படியாகி விட்டு சிம்பு தற்பொழுது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சிம்பு கடைசியாக நடித்த மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டி உள்ளது இதனைத் தொடர்ந்து பத்து தல திரைப்படமும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியது. இந்த நிலையில் 10 தல ரசிகர் மத்தியில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை

ஏ ஜி ராவணன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார் இவர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆட்சியை ஆண்டு வருகிறார் சிம்பு ஆட்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது துணை முதல்வராக கௌதம் மேனன் எப்படியாவது சிம்புவை அழிக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என சிம்புவின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என பல முயற்சிகள் செய்து வருகிறார் ஆனால் கௌதம்மேனன் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

இப்படி இருக்கும் நிலையில் கௌதம் கார்த்திக் ரகசிய காவல் அதிகாரியாக ஏ ஜி ராவணன் சிம்புவின் கோட்டையில் நுழைகிறார். அங்கு சிம்புவின் மணல் கொள்ளையை தடுப்பதற்காக பிரியா பவானி சங்கர் போராடிக் கொண்டிருக்கிறார் அந்த நேரத்தில் கௌதம் கார்த்திக் அங்கு செல்கிறார். இவர் சிம்புவின் அடியால்களில் ஒருவராக உள்ளே நுழைந்து விடுகிறார் அதுமட்டுமில்லாமல் சிம்புவின் முழு நம்பிக்கையும் சம்பாதிக்கிறார்.

அப்படி இருக்கும் நிலையில் சிம்பு தன்னுடைய மனதில் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு மட்டும் இடத்தை கொடுக்கிறார் சிம்புவின் பக்கம் சென்ற கௌதம் கார்த்திக் எப்படி சிம்புவுக்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் திரட்டுகிறார் சிம்புவை கொலை செய்ய முயற்சி செய்யும் கௌதம் மேனனின் வலையில் சிம்பு சிக்கினாரா இல்லையா உண்மையில் ஏ ஜி சரவணன் ஆக இருக்கும் சிம்பு யார் என்பதுதான் கதை.

இந்தத் திரைப்படம் கன்னடத்தில் வெளியாகிய மப்டி என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஆனால் அந்த திரைப்படத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் மிகவும் அழகாக திரைப்படத்தை வடிவமைத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணன். ஒரு சில காட்சிகள் மட்டும் மப்ட்டி திரைப்படத்தில்  இடம் பெற்றதாக இருந்தாலும் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையை மிகவும் அழகாக காட்டியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா.

அதேபோல் ஏ ஜி இராவணனாக நடித்து மிகவும் ரசிகர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளார் சிம்பு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் கன்னடா திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடிப்பு மிரட்டல் என்றால் தமிழில் பத்து தல திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பு ஒரு படி மேல் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக நடித்துள்ளார்.

கவுதம் கார்த்திக் வழக்கம்போல் நிதானமாக நடிப்பை வெளிப்படுத்தினாலும் ஆக்ஷன் காட்சிகளில் பென்னி பெடலெடுத்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் இருக்கிறது அரசியல்வாதி என்றால் எப்படி இருப்பார்கள் அவர்களின் ஆசை என்னவாக இருக்கும் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

அதேபோல் கன்னடத்தில் முக்கியமில்லாத கதாபாத்திரமாக இருப்பது கதாநாயகி கதாபாத்திரம் தான் ஆனால் பத்து தல திரைப்படத்தில் மிகவும் அருமையாக வடிவமைத்து  பிரியா பவானி சங்கருக்கும் முக்கிய கதாபாத்திரமாக அமைய செய்துள்ளார் இயக்குனர். சந்தோஷ் பிரதாப் ரெடின் கிங்ஸ்லி, அனு சித்தாரா, மது குருசாமி, சென்ராயன் என பலரும் தங்களுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

படத்தில் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் இரண்டாவது பாதி தோல்வி இல்லாமல் பரபரப்பாக செல்கிறது அதற்குக் காரணம் முழுக்க முழுக்க சிம்பு தான் அதேபோல் இசை புயல் ஏ ஆர் ரகுமான் ஒவ்வொரு முறையும் தனது வசம் இழுத்து வருகிறார் ரசிகர்களை. பத்து தலை திரைப்படத்தில் பாடல் மற்றும் பின்னணி இசை மிகவும் பிரமாதம் அதிலும் இடைவெளி காட்சி கிளைமாக்ஸ் காட்சி அற்புதம்.

படத்தில் முதல் பாதி மெதுவாக இருந்தாலும் இரண்டாம் பாதி பக்கா மாஸ்  மொத்தத்தில் 10 தலை பக்காவான ஆக்ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது.

Leave a Comment