பத்து தல திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியீடு.! உச்சகட்ட சந்தோசத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கல் மத்தில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன்பு இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இவருடைய படங்கள் ரசிகர்கள்  மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று வருகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு கம்பேக் கொடுத்து நடித்து வருகிறார் நடிகர் சிம்பு.

அந்த வகையில் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இதனை தொடர்ந்து இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

டீசர் வெளியே வருவதற்கு முன்பாகவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பத்து தல திரைப்படத்தை அடுத்து அடுத்ததாக வெந்து  தணிந்தது காடு 2 படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிம்பு இதனை முடித்தவுடன் அடுத்ததாக விண்ணைத்தாண்டி வருவாயா 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் சிம்புவுக்கும் இடையே ஒரு சில மன கஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் வெந்து தணிந்தது காடு 2 மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 உருவாகுமா என்று சந்தேகம் இருந்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் கதாபாத்திரம் தான் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நினைவு இருக்கா என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த பாடல்..

Leave a Comment