“பத்து தல” திரைப்படத்தின் வசூல் கணிப்பு.? சிம்புவின் கனவை தவிடு பொடியாக்கும் விடுதலை

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலிப்பவர் சிம்பு இவர் கடந்த சில வருடங்களாக சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு படங்களில் நடிப்பதால் வெற்றிகளை அள்ளுகிறார் அந்த வகையில் வெந்து தணிந்தது காடு, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் வெற்றி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா  சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி உள்ளதால் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது படத்தில் சிம்புவுடன் கை கோர்த்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர்,  கௌதம் வாசுதேவ் மேனன், சென்றாயன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

 இப்படி இருக்கின்ற நிலையில் பத்து தல திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது அதாவது சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூல் செய்தன இதனால் பத்து தல திரைப்படம் நிச்சயம் 100 கோடியை தாண்டும் என படகுழு திட்டமிட்டு இருக்கிறது.

இந்த படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தால் அடுத்தடுத்த படங்களில் தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என கருதி திட்டம் போட்டு இருக்கிறார் சிம்பு. ஆனால் தற்பொழுது நிலவுகின்ற சூழல் என்னவென்றால் மாத இறுதி நாள் என்பதால் டிக்கெட் புக்கிங் பெரிய அளவு இல்லை என சொல்லப்படுகிறது இதனால் சிம்புவின் பத்து தல திரைப்படம் ஒட்டு மொத்தமாக சுமார் 70, 80 கோடி வரை வசூலிக்கும் என கூறப்படுகிறது. டிக்கெட் புக்கிங் வைத்து மட்டும் இதை சொல்லவில்லை. பத்து தல திரைப்படத்தை எதிர்த்து வெற்றிமாறனின் விடுதலை திரைப்படமும் வெளியாகுவதால்..

சிம்புவின் படத்திற்கு வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது வெற்றிமாறன் படங்களுக்கு எப்பொழுதுமே குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது எனவே பத்து தல படத்தின் வசூல் குறைவது உறுதி அதனால் தான் 70 லிருந்து 80 கோடி வரை வசூலிக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..

Leave a Comment