தமிழ் சினிமாவில் சில மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் நில் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய சாதனையை படைத்த திரைப்படம் தான் கேஜிஎஃப் 2. முதன்முறையாக இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைத்த திரைப்படமாக இந்த திரைப்படத்தினை பற்றி பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் அதனை லைஃப் டைம் கலெக்ஷனை அசால்ட்டாக ஓவர் டக் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் பதான் இந்த படத்தினை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த நிலையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார் மேலும் இவர்களை அடுத்து ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். உலகளவில் 7000க்கும் அதிகமான திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்தப் படம் வெளியாகுவதற்கு முன்பு ஏராளமான சர்ச்சைகள் சிக்கிக்கொண்டது எனவே அந்த பிரச்சனைகளால் பதான் படத்தின் வசூலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸ் ஆனவுடன் தலைகீழாக மாறியது. அந்த வகையில் அமோக வெற்றியை பெற்ற நிலையில் தற்போது வரையிலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி இந்திய அளவில் அதிக வசூலை பெற்ற சாதனையை பதான் படம் படைத்துள்ளது. ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்களாகும் நிலையில் தற்பொழுது ரூ900 கோடி வசூலை கலந்துள்ளது. இந்த படத்திற்கு முன்பு யாஷ் நடிப்பில் வெளிவந்த கேஜிஎப் 2 திரைப்படம் இந்தி வெர்ஷன் மொத்தமாக ரூபாய் 435 கோடி வசூல் செய்த முதல் இடத்தில் இருந்த நிலையில் தற்போது பதான் திரைப்படம் அதனை முறியடித்துள்ளது.
அந்த வகையில் பதான் படத்தின் ஹிந்தி வெர்சனுக்கு மட்டும் தற்பொழுது வரையிலும் ரூபாய் 346 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக பாலிவுட் பிரபலங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது எனவே பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என ஷாருக்கான் நிரூபித்துள்ளது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் விரைவில் ரூ1000 கோடி கலெக்ஷனை பேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.