18 வருடங்களுக்கு பிறகு கமல் குரலில் வெளியான பத்தல.. பத்தல.. பாடல்.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.

0

80 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுபவர் கமலஹாசன். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு மாஸ்டர், கைதி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ்.

இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் அதிக திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.  நடிகர் கமலஹாசன் படங்களில் நடிப்பதையும் தாண்டி அரசியல் தொழில் நிறுவனங்கள் சின்னத்திரை தொகுப்பாளர் என அனைத்திலும் பிஸியாக ஓடிக் கொண்டிருந்ததால் அதிகம் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.

அதனால் தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தை பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சில சின்னதிரை பிரபலங்களான விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி போன்ற பலரும் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த படத்திலிருந்து ஒரு சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம்ம ட்ரெண்ட் ஆகியதை அடுத்து ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வருகின்ற 15ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் விக்ரம் படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல என்ற பாடல் வெளியாக உள்ளது.

18 வருடங்களுக்குப் பிறகு கமல் படத்தில் கமலின் குரலில் பாடல் வெளிவருகிறது. இதற்குமுன் கமலஹாசன் வசூல்ராஜா படத்தில் தான் இன்ட்ரோ பாடல் பாடியிருந்தார் இதை அடுத்து தற்போது வெளிவரும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் பெரிய அளவு எதிர்பார்த்து வருகின்றனர்