பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட திடீர் மரணம் -இயக்குனர் மீது பாயும் வழக்குகள்.! அதிர்ச்சி தகவல் இதோ.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இளம் இயக்குனர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருவர் இயக்குனர் மணிரத்னம் இதுவரை இவர் எடுத்த ஒவ்வொரு திரைப்படமும் நல்லதொரு வரவேற்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் தற்போதும் கூட மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் கதையை இரண்டு பாகங்களாக எடுக்கவுள்ளார்.

முதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ராஜா காலத்து கதை என்பதால் குதிரை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் படத்தின் ஷூட்டிங்கிற்காக சில நிஜ குதிரைகளை வைத்து படப்பிடிப்பு எடுத்துள்ளது மிகப்பெரிய ரிஸ்க்.

ஆனால் அதை பெரிதாக பொன்னின் செல்வன் படபிடிப்பு எடுத்துக்கொள்ளாமல் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நிஜ குதிரைகளை வைத்து எடுத்தது அப்போது ஒரு சிறு விபத்து ஏற்பட்டது அதில் ஒரு குதிரை எதிர்பாராத விதமாக இறந்தது.

இதுகுறித்து மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்தினம் அவர்கள் மீது வழக்குப்பதிவு போட்டுள்ளது மேலும் அந்த குதிரையின் உரிமையாளர் மீதும் வழக்குப் போட்டு உள்ளதாகவும் அதை தொடர்ந்து இதை விலங்கு நல வாரியம் விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைவருக்கு விலங்குகளையும் கடிதம் எழுதி உள்ளது.

இச்செய்தியை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பேசும் பொருளாகவும்இருந்து வருகிறது.

Leave a Comment