பருத்திவீரன் படத்திற்கு Rs=100,Rs=500 தான்.. பசியும் பட்டினியோடு இருக்கும் சிறு வயது முத்தழகின் உருக்கமான பேட்டி.!

paruthiveeran
paruthiveeran

Paruthiveeran : கார்த்தி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் பருத்திவீரன் இந்த திரைப்படத்தில் சிறு வயது முத்தழகாக நடித்த கார்த்திகா தேவி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் இந்த திரைப்படத்திற்கு பிறகு  ஒரு சில பட வாய்ப்புகள் வந்தாலும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பருத்திவீரன் திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் பருத்திவீரன் தரப்பில் இருந்து தனக்கு செய்த செயல் என அனைத்தையும் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பருத்திவீரன் திரைப்படம் கார்த்தி அவர்களுக்கு முதல் திரைப்படம் ஆனால் அவர் நடிப்பை பார்த்தால் யாருமே முதல் திரைப்படம் என்று கூற முடியாது அந்த அளவு தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி பருத்திவீரனில் மிரட்டி இருந்தார் இந்த திரைப்படம் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டுமே படமாக்கப்பட்டது 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி திரைக்கு வந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. கார்த்தி இந்த திரைப்படத்தின் மூலம் வெற்றி பெற்று அடுத்தடுத்த பட வாய்ப்பு அடைந்தார்.

கார்த்தி எப்படி நடித்தாரோ அதே அளவிற்கு முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் பிரியாமணி மிரட்டி இருந்தார். இந்த திரைப்படத்தில் முத்தழகு துருதுருவென திமிர் பிடித்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதேபோல் சிறு வயது முத்தழகாக நடித்த குழந்தையும் பலருடைய மனதை கவர்ந்தது. அந்த சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் கார்த்திகா தேவி தான். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பருத்திவீரன் நடித்தது குறித்து பேசி உள்ளார்.

மதுரை பக்கத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில் பிறந்த கார்த்திகா தேவி நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிலர் திரைப்படங்களில் நடிப்பதற்காக போய்க்கொண்டிருந்ததை பார்த்துள்ளார் அதே நேரத்தில் தான் படிக்கும் பள்ளியில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடிப்பதற்காக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்தார்கள் அதில் ஒருவர் தான் கார்த்திகா தேவி.

ஸ்கூல் படிக்கும் பொழுது டான்ஸ்  நன்றாக ஆடுவார் கார்த்திகா தேவி அதனால் இவரை ஆடிஷன் அழைத்தார்கள் அங்கு டான்ஸ் ஆட சொல்லி பார்த்தார்கள் இவரும் டான்ஸ் ஆட பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கு முடிவு செய்தார்கள். கார்த்திகா தேவியை தேனி பக்கத்தில் நடக்கும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு கொண்டு சென்றார்கள் அங்கு பட குழுவினர் சொன்னபடியே கார்த்திகா தேவியும் நடித்துக் கொடுத்தார். ஆனால் அவருக்கு எவ்வளவு சம்பளம் என்றே தெரியாதாம்.

பிறகு கார்த்திகா தேவியின் அம்மா பேசும் பொழுது என்னுடைய மகள் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளம் எல்லாம் தரவில்லை என்னுடைய கணவரிடம் 100 அல்லது 500 ரூபாய் கொடுத்து அனுப்புவார்கள். இந்த திரைப்படத்திற்காக கார்த்திகா தேவி கிட்டத்தட்ட சில மாதங்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிறு வயது ப்ரியாமணி கதாபாத்திரத்தில் கார்த்திகா தேவி நடித்து முடித்த பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதிலும் நடித்தாலும் பெரிதாக பிரபலமாக முடியவில்லை.

சில வருடம் கழித்து கார்த்திகா தேவியின் அப்பா இறந்துவிட்டார் பிறகு வீட்டில் மூன்று பெண் குழந்தைகள் இருந்ததால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டுள்ளது கடன் பிரச்சினையால் இவர்கள் குடும்பம் தவித்த பொழுது இவர்களை பருத்திவீரன் திரைப்படத்திற்கு நடிக்க வைப்பதற்காக கூட்டிக்கொண்டு போனவர்களிடம் தங்களுடைய நிலைமையை பற்றி கூறியுள்ளார் அதேபோல் அமீர் இந்த திரைப்படத்தின் பிரபலங்களிடம் தங்களுடைய நிலைமையை எடுத்து சொல்ல சொன்னார்கள் ஆனால் அவர் சொன்னாரோ இல்லையோ தெரியவில்லை இப்ப வரைக்கும் எங்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என கார்த்திகா தேவி  மனம் நொந்து கூறியுள்ளார்.