பார்த்திபனின் “இரவின் நிழல் திரைப்படம்” – 8 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் பார்த்திபன் சினிமா உலகில் ஒரு ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அவருக்கு ரொம்ப பிடித்தது என்னவோ இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் இயக்குனராக முதலில் புதிய பாதை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து அறிமுகமானார்.

அதன் பின் நடிகர் பார்த்திபன் குடைக்குள் மழை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, பித்தகன் என பல்வேறு சிறந்த படைப்புகளை கொடுத்து தனது திறமையை  வெளிகாட்டிக்கொண்டார். சினிமா உலகில் இவர் முக்கியத்துவம் உள்ள கதைகள் ஏதேனும் வந்தால் அதிலும் துணிந்து நடித்து வருகிறார் அண்மையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்.

படத்தில் பலுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு முன்பாக நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கியுள்ளார் அந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இரவின் நிழல் திரைப்படத்தில் பார்த்திபனுடன் கைகோர்த்து பிரிகிடா, ரேகா நாயர், பிரியங்கா ரூத் ரோபோ சங்கர், வரலட்சுமி  சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், சந்துரு மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர். படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலான நிலையில் இப்பவும்..

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு குறையாமல் இருப்பதால் பிரம்மாண்டமான ஒரு வசூலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. 8 நாள் முடிவில் நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் சுமார் 6 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசுலை இந்த திரைப்படம் அள்ளும் என அடித்து கூறப்படுகிறது.

Leave a Comment