கல்லாப்பெட்டியை நிரப்பும் பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படம் – 4 நாள் முடிவில் மட்டும் இத்தனை கோடி வசூல ..

80 காலகட்டங்களில் இருந்து நடித்து வருபவர் பார்த்திபன்.

முதலில் நடிகராக பார்த்திபன் ரஜினி நடிப்பில் வெளிவந்த ராணுவ வீரன் திரைப்படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என எல்லா கதாபாத்திரத்திலும் நடித்து வெற்றி கண்டார்.

இப்படி சினிமா உலகில் ஓடினாலும் மறுபக்கம் இயக்குனர் அவதாரம் எடுத்து அதிலேயும் வெற்றி கண்டார் முதலில் புதிய பாதை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து அசதினார் அதன் பிறகு குடைக்குள் மழை, உள்ளே வெளியே, சுகமான சுமைகள், பொண்டாட்டி தேவை, புள்ள குட்டிக்காரன், ஹவுஸ்புல் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி தற்பொழுது சினிமா உலகில் ஒரு பக்கம் புதிய படங்களில் நடிக்க மறுபக்கம் இவரே இயக்கியும்  நடித்தும் வருகிறார்.

அண்மையில் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று அசத்தியது அதனைத் தொடர்ந்து இப்பொழுது இரவில் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் பார்த்திபனுடன் இணைந்து பிரகிடா, பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ஆனந்த கிருஷ்ணன், சினேகா, சந்துரு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் சூப்பர் ஆக நடித்து அசத்தினர்.

இரவின் நிழல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதன் காரணமாக நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது படம் வெளிவந்து இதுவரை நான்கு நாட்களைத் தொட்டு உள்ள நிலையில் உலகம் முழுவதும் சுமார் 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வருகின்ற நாட்களிலேயும் இந்த படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது அந்த அளவிற்கு தற்பொழுது மக்களுக்கு பிடித்த படமாக மாறி உள்ளது இரவின் நிழல்.

Leave a Comment