கவுண்டமணியை பற்றி புட்டு புட்டு வைக்கும் நடிகர் பார்த்திபன்.! இது அல்லவா வாழ்க்கை.

0

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி.அப்போதைய காலகட்டத்திலேயே புது புது விதமான காமெடிகளை தேசிய மக்கள் மற்றும் ரசிகர்களை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும் ஒரு பக்கம் சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் கவுண்டமணி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ரஜினி கமல் ஆகியோர் காலகட்டத்தில் தொடங்கி தற்போது அருகிலும் பலதரப்பட்ட படத்தில் நடித்து வந்தார் இவர் இதுவரையிலும் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது காமெடியனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் கலக்கியுளளார்.

இந்தநிலையில் கவுண்டமணியை பற்றி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.அவர் கூறியது கவுண்டமணி மிகவும் வித்தியாசமான ஒரு நடிகர்.

அவர் நடிப்பதை விட அவரது ஆக்டிவிட்டி  மிகவும் வித்தியாசமாக இருக்கும் அவரது நடவடிக்கை எல்லாம் ஹாலிவுட் நடிகர்களின் ஸ்டைலை போல தான் அவரது ஸ்டைலும் இருக்கும் 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் கரெக்டாக அந்த நேரத்திற்கு வந்து இறங்குவார்.

gowndamani
gowndamani

அவருடைய வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள் ஆனால் எப்படி வாழ்வது என்று தெரியாது ஆனால் கவுண்டமணி வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ கூடியவர்  உதாரணமாக எங்கு  சூட்டிங் நடந்தாலும் அங்கு இருக்கும் 5 ஸ்டார் அல்லது 7 ஸ்டார் ஹோட்டலில் தங்குவது தான் அவரது ஸ்டைல்.

மிகவும் விலை உயர்ந்த விஷயங்களை அனுபவிக்க நினைப்பவர். நான் டாடா பிர்லா படத்தின் பொழுது அவரை கூர்ந்து கவனிப்பதன் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என கூறினார்.