பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்” திரைப்படம் – முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

நடிகர் பார்த்திபன் 1981 ஆம் ஆண்டு வெளியான ராணுவ வீரன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் வந்து மட்டுமே போவார் இவர் தாவணி கனவுகள் என்ற திரைப்படத்தில் நடித்து தான் முழு நேர ஹீரோவாக மாறினார். அதன்பின் இவர் தனது திறமையை காட்டி தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஒரு கட்டத்தில் நடிப்பதையும் தாண்டி இயக்குனர் அவதாரமும் எடுத்தார் அந்த வகையில் நடிகர் பார்த்திபன் புதிய பாதை என்னும் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது அதன் பின் ஹவுஸ்புல், இவன், உள்ளே வெளியே, புள்ள குட்டிக்காரன், குடைக்குள் மழை என பல படங்களை இயக்கி வெற்றிகண்டார் மேலும் அதே படங்களில் நடிக்கவும் செய்தார்.

என்பது குறிப்பிடத்தக்கது நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் ஏழு என்ற படத்தை எடுத்தார் இந்த படம் பார்த்திபனுக்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது மேலும் நேஷனல் ஃபிலிம் அவார்டு விருதையும் இந்த படம் வாங்கியது அதனைத் தொடர்ந்து தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த படம் வித்தியாசமாக இருந்ததால் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒத்த செருப்பு போலவே இந்த படமும் பல்வேறு விருதுகளை பெரும் என கூறப்படுகிறது.

இரவின் நிழல் படத்தில் பார்த்திபன் உடன் கைகோர்த்து பிரகிடா, பிரியங்கா ரூத், ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார், சினேகா, சந்துரு மற்றும் பலர் நடித்து உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று வெளியான இரவு நிழல் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் முதல் நாளில் மட்டுமே சுமார் 90 லட்சம் வரை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால் வருகின்ற நாட்களில் இரவு நிழல் திரைப்படம் நல்ல வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

Leave a Comment