படத்தின் சீக்ரெட் வெளியாக கூடாது என்பதற்காக ஆடியோ வெளியிட்டு விழாவில் ட்விஸ்ட் வைத்த பார்த்திபன்..!

0
parthiban
parthiban

தனித்துவமான கதை அம்சத்தை கொண்டு  படம் இயக்குவதில் வல்லவராக இருந்து வருகிறார் நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன். இவர் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தைத் தொடர்ந்து தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் இரவின் நிழல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிட்டு உள்ளார் பார்த்திபன். இந்த விழாவிற்காக பல முன்னணி நட்சத்திரங்களை பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

படத்தின் முதல் 30 நிமிடங்கள் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார். இந்நிலையில்  ஆடியோ வெளியீடு விழா குறித்த காட்சிகள் லிக் ஆவதை தடுக்கும் வகையில் பார்த்திபன் அவர்கள் முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

parthiban
parthiban

இவர் அனுப்பிய வெளியீட்டு விழா அழைப்பிதழ் உடன் மொபைல் போன் அனுமதி இல்லை என அதில் குறிப்பிட்டுள்ளார். இரவின் நிழல் திரைப்படத்தை ஒரே ஷாட்டில்  எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் 90 நாட்கள் ஒத்திகை பார்த்த பிறகு படமாக்கப்பட்டுள்ளது.

parthiban
parthiban

இந்த திரைப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி, ரோபோ சங்கர், பிரியங்கா ரூத், ரேகா குமார், ஆனந்த கிருஷ்ணன், என பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்துள்ளார்.