பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரைலர்.!

0

தமிழ் திரையுலகில் குறிப்பிட்டு வரும் சிறந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பார்த்திபன் அவர் தனக்கென ஒரு உரித்தான பாணியில் தொடர்ந்து ஒரு வித்தியாசமான படங்களை வழங்கி ரசிகர்களை மிகவும் மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் உலக சாதனையாக ரசிகர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டு அவரின் முயற்சியினால் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இந்நிலையில் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபார்மஸ் சார்பில் இயக்குனர் பார்த்திபன் தயாரிப்பில் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் இரவின் நிழல் இந்த திரைப்படத்தில் பிரபலமான பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகிடா சகா, ஆனந்த கிருஷ்ணன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள. ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து முன்னதாகவே கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தயாரிக்கப்பட்ட இரவின் நிழல் திரைப்படத்திற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் வி கிரியேஷனில் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அவர்கள் வெளியிட வருகின்ற ஜூன் 14ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள தியேட்டர்களில் வெளியாக போவதாக அபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷார்ட் உருவாக்கப்பட்டு உலக சாதனையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புத்தகங்களில் இடம் பெற்றுள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பெரும் எதிர்பார்ப்பில் காத்து வருகிறார்கள். எனவே ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ட்ரெய்லர் ஒன்று வெளியாகி வருகிறது.

தற்போது இரவின் நிழல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதை பார்த்த ரசிகர்கள் இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஜூன் 14ஆம் தேதிக்காக ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். நடிகர் பார்த்திபனின் நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.