தன்னை பைத்தியம் என கலாய்த்த பிரதீப் ரங்கநாதன்.! வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்..

சமீப பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட இயக்குனர் பார்த்திபன் தன்னை பைத்தியம் என்று கலாய்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அது குறித்த தகவலை தற்பொழுது பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பார்த்திபன் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து படங்கள் இயக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் கடைசியாக இரவின் நிழல் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே படத்தில் நன்றாக பேசிக் கொண்டிருந்த நீ ஏன் பார்த்திபன் மாதிரி பேசுகிறாய் என்ற ஒரு வசனம் வரும்.

அந்த வசனத்தை முதலில் நானும் எல்லாரையும் போல கேட்டு சிரித்தேன் ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது என்னை அந்தப் படத்தின் இயக்குனர் கலாய்த்து இருக்கிறார் என்று. அதாவது நன்றாக இருக்கும் நீ ஏன் பைத்தியம் போல் பேசுகிறாய் என்பதுதான் அந்த வசனத்தின் அர்த்தம் என்பது எனக்கு தாமதமாக தான் புரிந்தது.

இவ்வாறு இந்த அளவிற்கு தன்னை விமர்சனம் செய்திருக்கும் நிலையில் இதற்கு பின்னணியில் ஒரு கதை உள்ளது. அதாவது, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான கோமாளி கதை என்னுடைய உதவியாளர் ஒருவரின் கதையைப் போல் இருந்தது என்று எழுத்தாளர் சங்கத்தில் பிரச்சனை வந்தது. கே பாக்யராஜ் அவர்கள் என்னுடைய உதவியாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் மேலும் அவர் பத்து லட்சம் ரூபாயும் பெற்று தந்தார்.

என்னுடைய உதவியாளருக்கு நான் ஆதரவாக இருந்ததால் ஒருவேளை பிரதீப் ரங்கநாதனுக்கு என் மீது கோபம் இருந்திருக்கும் அதனால் ஒரு சிறிய பழிவாங்கலாக இது இருக்கலாம் என்று நான் நினைத்தேன் என கூறினார். ஆனால் இன்னும் சில நாட்கள் கழித்து அவர் மெச்சூரிட்டி ஆனவுடன் இதை செய்தது தவறு என்று அவரே புரிந்து கொள்வார் என்று கூறினார்.

மேலும் பிரதீப் ரங்கநாதனின் அபாரமான வளர்ச்சியை பார்த்து நான் மிகவும் ரசிக்கிறேன், அவருடைய லவ் டுடே படத்தை நான் பல மேடைகளில் பாராட்டி இருக்கிறேன், இப்பொழுதும் அவர் என்னும் உயர வேண்டும் என்று தான் வாழ்த்துகிறேன் என தெரிவித்து இது என்னுடைய மெச்சூரிட்டி என்றும் அதே மெச்சூரிட்டி அவருக்கு ஒரு நாள் வரும் எனவும் கூறினார்.

Leave a Comment