பார்த்தேன் ரசித்தேன் திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.! பல வருடங்களுக்கு பிறகு வெளியான தகவல்

0

தமிழ்சினிமாவில் பல திரைப்படங்கள் ஒரு நடிகருக்கு எழுதப்பட்டு பிறகு வேறொரு நடிகர் நடித்து ஹிட் ஆகிய கதை நாம் அனைவரும் பார்த்திருப்போம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சரண்.

இவர் இயக்கிய காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு சினிமா பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது, அதனைத்தொடர்ந்து அடுத்ததாக அமர்க்களம் படம் அஜித்தின் சினிமா பயணத்தில் அடுத்த அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன், இவரை அனைவரும் இடுப்பழகி என்று தான் அழைப்பார்கள், அந்த அளவு தனது நடனத்தின் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்தவர், அது மட்டுமில்லாமல் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் கொடுத்துள்ளார். சிம்ரனை வைத்து இயக்கிய திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன் இந்த திரைப்படத்தை சரண் தான் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டானது. படத்தை எஸ் திருவேங்கடம் என்பவர் தான் தயாரித்திருந்தார், மேலும் படத்தில் சிம்ரன், லைலா, சார்லி, தாமு, ரகுவரன், வினுசக்கரவர்த்தி, வையாபுரி என பலர் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தில் தான் சிம்ரன் முதன்முதலாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் சரண் பார்த்தேன் ரசித்தேன் படம் பற்றி ஒரு பேட்டியில் கூறினார்.

அந்த பேட்டியில் சரண் முதலில் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரம்பாவை தான் ஒப்பந்தம் செய்ய இருந்தோம், ஆனால் ரம்பா ஹீரோயினுக்கு இரண்டு டூயட் இருக்கிறது ஆனால் எனக்கு எந்த ஒரு டூயட்டும் இல்லை எனக் கூறி நடிக்க முடியாது என கூறிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் வில்லியாக நடிப்பதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் வில்லியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறினாராம். பிறகு சிம்ரனை ஒப்பந்தம் செய்தோம் இவ்வாறு அவர் கூறினார்.