“லியோ” திரைப்படத்தை எதிர்த்து மோதும் பார்ட் 2 படம்.? விஜய்க்கு வந்த புது தலைவலி

0
leo-
leo-

லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து “லியோ” என்னும் படத்தை எடுத்து வருகிறார் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் உடன் கை கோர்த்து திரிஷா, கௌதம் மேனன், மன்சூர் அலிகான்..

கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சந்திப் கிஷன், பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். நடிகை த்ரிஷா மட்டும் காஷ்மீர் சென்று மூன்றே நாட்களில் சென்னை திரும்பியதால்..

இவர் லியோ படத்தில் நடிக்கிறாரா.. இல்லையா.. என தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட வண்ணமே இருக்கின்றனர். லியோ திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரீலிஸாக இருக்கிறது. இந்த திரைப்படம் 1000 கோடி வசூலை அள்ளும் என தற்போது கணக்கு போடப்பட்டு இருந்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படத்திற்கு போட்டியாக மற்றொரு பிரம்மாண்ட படம் வெளியாக இருக்கிறதாம்.. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் தற்போது vfx பணிகள் தாமதமாவதால் ரிலீஸ் தேதியும் தள்ளி போய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை லியோ ரிலீஸ் ஆகும்.. அதே தேதியில் பொன்னியின் செல்வன் படம் வரலாம் என சொல்லப்படுகிறது அப்படி நடக்கும் பட்சத்தில் லியோ படத்தின் வசூலில் சிக்கல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..