ஆறு வருடங்களுக்கு பிறகு தனது காதலியை சந்தித்த பரோட்டா சூரி வைரலாகும் புகைப்படம்

0

2013ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த தமிழ் திரைப்படம் ஆகும், பொன்ராம் இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சூரி சத்யராஜ் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சூரி தங்களது யதார்த்தமான நகைச்சுவை காமெடிகளில் நடித்ததால் படமும் சூப்பர் ஹிட்டாகி வென்றாது, இவர்களின் இருவரின் காமெடி நடிப்பும் பிரபலமாக பேசப்பட்டது. அதேபோல் நடிகர் ஸ்ரீதிவ்யாவும் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார்.

ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாகவும் நடிகர் சூரியின் காதலியாகவும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு, இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பரோட்டா சூரியை ஷாலு ஷம்மு சந்தித்துள்ளார் அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆறு வருடங்களுக்கு பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் நடித்த காதலியை சூரி சந்தித்துள்ளார் என நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

actor-soori
actor-soori