மறைந்த பின்பும் விஜே சித்ராவின் பிறந்தநாளை கொண்டாடிய பெற்றோர்கள் கண்கலங்க வைக்கும் தருணம்.!

0

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தனது அயராத உழைப்பினால் மேலே வந்தவர் தான் விஜே சித்ரா இவர் தொகுப்பாளினியாக இருந்து பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சித்ரா பொதுவாகவே நல்ல குணம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது சித்ரா கடந்த வருடம் மன உளைச்சல் காரணமாக மறைந்துவிட்டார் அவரது இழப்பு அப்பொழுது ரசிகர்களால் தாங்க முடியவில்லை தற்போது வரை அவரது புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சித்ராவின் பிறந்தநாள் இன்று அவரது பெற்றோர்கள் அவரது புகைப்படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள் ஆம் சித்ராவின் அப்பா கேக் வெட்டி அவரது புகைப்படத்திற்கு ஊட்டும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vj chithra
vj chithra

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் தானாக வெளிவருகிறது என கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

vj chithra 3
vj chithra 3

மேலும் சித்ரா சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.இந்நிலையில் சித்ராவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.