சரத்குமாரின் “பரம்பொருள்” திரைப்படம் எப்படி இருக்கு.! வெளிவந்த விமர்சனம்

Paramporul : சினிமா உலகில் பல வருடங்களாக நடிக்கும் நடிகர், நடிகைகள் இளம் தலைமுறை நடிகர்களுக்கு வழி விடுவதில்லை பட வாய்ப்புகளை தட்டி பறிக்கிறார்கள் என சிலர் கூறி வருகின்றனர் ஆனால்  வயதாகிவிட்டால் திறமை குறையப்போவதில்லை என்பதற்கு உதாரணமாக ரஜினி, கமல் ஆகியவர்களை சரத்குமாரும் அதை புரிய வைக்கிறார்.

இவர் சமீப காலமாக நல்ல கதைய அம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். வாரிசு படத்தை தொடர்ந்து இவர் கடைசியாக நடித்த போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து தற்பொழுது பரம்பொருள் என்னும் படத்தில் நடித்துள்ளார் படம் இன்று வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.

அரவிந்த் ராஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சரத்குமார் உடன் இணைந்து அமிதாஷ் பிரதான் மற்றும் பலர் நடித்துள்ளனர் படம் முழுக்க முழுக்க சிலை கடலை மையமாக வைத்து உருவாகி உள்ளது. சரத்குமார் மைத்ரேயன் என்ற பேராசைமிக்க  ஒருவராக நடித்துள்ளார்.

இவரது மனைவியை பிரிந்து செல்ல தனியாக நிற்கும் சரத்குமார் சிலை கடத்தல் வேலைகளை செய்கிறார் ஆதி என்பவரும் சிலை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டு நல்ல நண்பர்களாக மாறுகின்றனர். பின் இருவரும் புத்தர் சிலை ஒன்றை விற்க முயற்சி செய்கின்றனர். திட்டமிட்டபடி சிலையை விற்றார்களா என்பது தான் படத்தின் கதை..

படத்தின் ஒவ்வொரு சீனும் விறுவிறுப்பாக பஞ்சம் இல்லாமல் இருக்கும் படத்தில் சரத்குமார், அமிதாஷ் ஆகியோர்களின் நடிப்பு கைதட்டும் வகையில் உள்ளது யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப் பெரிய பலமாக இருக்கிறது.  மொத்தத்தில் பரம்பொருள் படம் பர்ஃபெக்ட்.