papanasam villan actor : 2015ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் கௌதமி நடிப்பில் வெளியாகி திரைப்படம் பாபநாசம். இந்த திரைப்படத்தை சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியூஸ், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ஆகியோர்கள் இணைந்து தயாரித்தார்கள்.
இந்த திரைப்படத்தில் மோகன்லால், மீனா பேபி, எஸ்தர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள், இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, அதுமட்டுமல்லாமல் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி கன்னடம் என 4 மொழிகளிலும் மறுபதிப்பு செய்யப்பட்டு 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அதேபோல் மலையாளத்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரோஷன் பஷீர் அவர்கள் தமிழிலும் நடித்திருந்தார், ரோஷன் பஷீர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் இதுதான், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இவர் சினிமா உலகில் 2010ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய பிளஸ்-2 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், ரோஷன் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் ரோஷன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பாபநாசம் படத்தின் வில்லனா இது என ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள், அந்த அளவு இவர் உடலை கட்டு கோப்புடன் வைத்துள்ளார்.

