கவுதமிக்கு பதிலாக பாபநாசம் 2 திரைபடத்தில் நடிக்கபோவது இந்த நடிகையா..? இணையத்தில் லீக்கான தகவல்..!

papanasam 2 movie actress latest news: மலையாளத்தில் த்ரிஷ்யம்  என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்ட இயக்குனர்தான் ஜீத்து ஜோசப். இவர் அதே திரைப்படத்தை தமிழில் கமல் மற்றும் கௌதமி வைத்து இயக்கி மாபெரும் வெற்றி கண்டார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் வெளிவந்ததை தொடர்ந்து அதனை மற்ற மொழியில் ரீமிக்ஸ் செய்வதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார் இந்த இரண்டாம் பாகத்தில் வெங்கடேஷ் மீனா நதியா நரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முன்வந்தார்கள் ஆனால் நடிகர் கமலஹாசன் அரசியல் பணியில் மிகத் தீவிரமாக இருந்ததன் காரணமாக பாபநாசம் டு திரைப்படத்தில் நடிப்பாரா இல்லையா என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு இருந்து கொண்டே இருந்தன.

இந்நிலையில் தமிழில் பாபநாசம் முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீபிரியா தற்போது இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க முன் வந்துள்ளாராம் இதற்காக நடிகர் கமல்ஹாசன் மற்றும் மீனாவை அணுகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மீனா கமலுடன் நடித்தால் வெகு காலம் கழித்து ஒன்றாக நடிக்கும் படம் இதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் மீனா இதற்கு முன்பு அவ்வைசண்முகி படத்தில்தான் கமலுடன் இணைந்து நடித்திருந்தார்.

papanasam-2
papanasam-2

ஆனால் இத்திரைப்படம் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளி வராத காரணத்தினால் இவை எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

papanasam-2
papanasam-2

Leave a Comment