டாப் 10-ல் முதல் இடத்தைப் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.! இனிமேல் இவர் தான் குட்டி நயன்தாரா..

சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் இவர்களை நாள்தோறும் பார்ப்பதனாலோ என்னவோ தங்களது முதல் சீரியலிலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகிறார்கள். மேலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள்.தற்பொழுது 2021ஆம் ஆண்டிற்கான டாப் 10 சீரியல்கள் நடிகைகளின் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பத்தாவது இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வரும் சுந்தரி கதாபாத்திரம் 10வது இடத்தினை பிடித்துள்ளது.இந்த சீரியல் சுந்தரி கதாபாத்திரத்தில் கேப்ரில்லா என்ற நடிகை நடித்து வருகிறார்.இவர் யூடியூப் சேனலில் தனது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து மௌன ராகம் 2 சீரியலில் கதாநாயகியாக சத்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனாவிற்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது  இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

எட்டாவது இடத்தை கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ரேஷ்மாவுக்கு கிடைத்துள்ளது. இவர் இந்த சீரியலில் தன்னுடைய கணவர் மதனுடன் இணைந்து நடித்து வருகிறார். ஏழாவது இடம் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த பிரபலம் அடைந்த ஆஷா கௌவுடா பெற்றுள்ளார் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ஆறாவது இடம் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி அர்ஜுனாவுக்கு கிடைத்துள்ளது அர்ச்சனா சோசியல் மீடியாவில் நீண்ட காலங்களாக மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.ஐந்தாவது இடம் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜனனி என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் நடித்திருந்தார்.

நான்காவது இடம் தற்பொழுது அனைத்து தொலைக்காட்சிகளின் சீரியலையும் ஓவர் டேக் செய்துவிட்டு டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சன் டிவி சீரியலான கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டிக்கு கிடைத்துள்ளது.இவரை தொடர்ந்த அதே வரிசையில் செம்பருத்தி சீரியல் கதாநாயகி ஷபானாவும் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

மூன்றாவது இடம் திருமணம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ள ஸ்ரேயா பிடித்துள்ளார் இவர் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் சித்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இரண்டாவது இடம் விஜய் டிவியின் தேன்மொழி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமடைந்த ஜாக்குலின் கிடைத்துள்ளது இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாக தொகுப்பாளராக நீண்ட காலங்களாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த படம் காவியா அறிவுமணி பெற்றுள்ளார். இவர் ரசிகர்களால் குட்டி நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்பட்ட வருகிறார் இவரும் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Leave a Comment