லாரன்ஸ் படத்தின் ஆடிஷனுக்கு சென்று அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லையை அனுபவித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..

Pandiyan stores: முத்தம் கொடுத்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்ட நபரை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கும் நிலை அது குறித்த தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அண்ணன் தம்பிகளின் பாச போராட்டத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் ஏற்பட்டிருப்பதை மறைத்து மீனா, முல்லை இருவரும் இதற்கான சிகிச்சை அளித்து வருகின்றனர். அதற்காக தனம் கர்ப்பமாக இருந்ததால் ஆபரேஷன் செய்து பெண் குழந்தையை வெளியில் எடுத்து உள்ளார்கள்.

அதேபோல் ஐஸ்வர்யாவிற்கு இதற்கு முன்பு பெண் குழந்தை பிறந்த நிலையில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை தீபிகா. சமீப பேட்டியில் தீபிகா, நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல casting couch பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

எனவே ஆடிஷனுக்கு அழைத்தார்கள் நானும் அங்கு போய் இருந்தேன் அங்கு ஒரு ரூமில் ஒரு நபர் தவிர வேறு யாருமே இல்லை படத்தில் அந்த கதாபாத்திரம் முத்தம் கொடுக்க வேண்டும் அதை செய்து காட்ட வேண்டும் என்று கேட்டார். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் வேறு கதாபாத்திரம் இருந்தால் சொல்லுங்கள் என கேட்ட பொழுது இதற்கு முன் 8 பெண்கள் வந்து கிஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க உங்களுக்கு மட்டும் கொடுக்க முடியாது என்று வெளிப்படையாக கூறினாராம்.

Leave a Comment